முகப்பு
தினம் ஒரு தேவாரம்

22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 7

உயிர்களை வளர்க்கும் தண்ணீர் போன்று அனைத்து உயிர்களுடனும் கலந்து நின்று உயிர்களின் ஞானத்தை வளர்ப்பவனும், சிவநெறியில் பொருந்தாத

Updated On : 19 ஏப்ரல், 2016 at 3:29 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:35 PM

பாடல் 7

புனல் ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனல் ஒப்பானை அரத்துறை மேவிய
கனல் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

விளக்கம்

மினல் = வாழ்வினை ஒரு கணத்தில் மின்னல் போல் மறையச் செய்பவன். மினல் என்பதற்கு மின்னலுடன் தோன்றும் இடி என்று பொருள் கொண்டு, பகைவர்கட்கு இடி போன்றவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தம். பொருந்தலர் = சிவநெறியில் பொருந்தாத முப்புரத்து அரக்கர்கள். கனல் = தீ. இறைவனை புனல் ஒப்பான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகினார். தண்ணீரின் தன்மை அனைத்துப் பொருட்களையும் வளரச் செய்வது. தண்ணீர் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. அதேபோன்று, அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று, உயிர்களின் அறிவினை வளர்த்து வரும் இறைவனை, மிகவும் பொருத்தமாக புனலொப்பான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

பொழிப்புரை

உயிர்களை வளர்க்கும் தண்ணீர் போன்று அனைத்து உயிர்களுடனும் கலந்து நின்று உயிர்களின் ஞானத்தை வளர்ப்பவனும், சிவநெறியில் பொருந்தாத பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களுக்கு இடி போன்றவனும், பகைவர்களுக்கு அனல் போன்றவனும், விண்ணோர்களால் அறியமுடியாதவனும், உயிர்களுடன் கலந்து என்றும் அணையாத தீ போல நின்று உயிர்களின் அறியாமையை ஒழித்து ஓங்கி வளரும் ஞானமாக இருப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனை காணுங்கள். அவனைத்தான் நாம் தொழுகின்றோம்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.