முகப்பு
தினம் ஒரு தேவாரம்

35. செஞ்சடைக் கற்றை - பாடல் 5

தமது வாயால் வேதம் ஓதியவராய், சந்திரனின் ஒளி படிந்த

Updated On : 2 செப்டம்பர், 2016 at 5:28 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

பாடல் 5

ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா எறிக்கும் சென்னிச்

பூதனார் பூதம் சூழப் புலியுரி அதளனார் தாம்

Advertisement

நாதனார் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே

காதில் வெண்குழைகள் தாழக் கனல் எரி ஆடுமாறே

விளக்கம்

பூதனார் = ஐந்து பூதங்களாய் இருப்பவர். நவின்ற = பல காலம் பழகிய. அதள் = தோல். செய் = நன்செய் நிலம், நன்செய் நிலத்தில் விளையும் நெல்லினை இங்கே குறிக்கின்றது. அரி = அறுவடை செய்யப்படும்.

பொழிப்புரை

ஐம்பூதங்களாகத் திகழும் சிவபிரான், தமது வாயால் வேதம் ஓதியவராய், சந்திரனின் ஒளி படிந்த சென்னியராய், பூதகணங்கள் சூழ நின்று, புலித் தோலை ஆடையாக அணிந்தவராய், தான் பலகாலும் பழகிய தில்லைச் சிற்றம்பலத்துள் தீயின் இடையே நடம் ஆடுகின்றார். எல்லோர்க்கும் தலைவரான சிவபிரான் அத்தகைய நடனம் ஆடும்போது அவர் காதில் அணிந்துள்ள வெண்குழைகள் தாழுமாறு ஆடுகின்றார். நெல் விளையும் நன்செய் நிலங்களைக் கொண்ட தில்லை சிற்றம்பலத்தில், அனல் ஏந்திய தனது கையினை வீசி ஆடும் சிவபிரான், ஊழித்தீயின் நடுவே நின்று நடனம் ஆடுகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.