47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 7
ஆயிரம் கிளைகளுடன் கங்கை நதி கீழே இறங்கி
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகமதாகி
வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே
விளக்கம்
மை = குற்றம். மையறு = குற்றமற்ற.
Advertisement
பொழிப்புரை
குற்றமற்ற மனத்தினை உடைய பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்பதற்காக சிவபிரான் ஒப்புக்கொண்டார்: மிகவும் வேகமாக, ஆயிரம் கிளைகளுடன் கங்கை நதி கீழே இறங்கி வந்தபோது, உலகத்தையே புரட்டி பாதாளத்திற்கு கொண்டுசெல்வதுபோல் வேகமாக வந்தது. ஆனால் சிவபெருமானின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருந்த தேவர்கள் ஐயம் ஏதும் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப கங்கை நதியைத் தனது சடையில் அடக்கிய சிவபிரானை தேவர்கள் வாழ்த்தினார்கள்: அத்தகைய ஆற்றல் படைத்தவர்தான் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.