முகப்பு
தினம் ஒரு தேவாரம்

14. அரவணையான் சிந்தித்து - பாடல் 4

இந்தப் பாடலில் அப்பர் பிரான் தவறு செய்யும் மனிதர்களின் தவறுகளை அறியும் ஆற்றல் படைத்த திருவடி என்று கூறுகின்றார்.

Updated On : 29 ஜனவரி, 2016 at 1:10 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 9:56 PM

அரும்பித்த செய் ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதலாகா
அருட் சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும்
காய்ந்த அடி
பெரும் பித்தர் கூடிப் பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய
வல்ல அடி
திருந்து நீர் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்
செல்வன் அடி

விளக்கம்

அரும்பித்த ஞாயிறு = தாமரை அரும்பினை மலர வைக்கும் சூரியன். திருந்து நீர் = தெளிந்த நீர். ஏய்க்கும் = ஒத்திருக்கும். பிழைப்பு = தவறுகள். வண்டினங்கள் சூழ்ந்த அடி என்று இங்கே அப்பர் பிரான் கூறுவதற்கு நாம் இருவகையாக பொருள் கொள்ளலாம். அடியார்கள் தூவிச் தொழுத புது மலர்கள் திருவடியில் எப்போதும் காணப்படுவதால், அந்த புது மலர்களிலுள்ள தேனைப் பருகுவதற்காக சூழ்ந்த வண்டினங்கள் என்றும், பெருமானின் திருவடிகள் செந்தாமரை மலர் போன்று காட்சி அளிப்பதால், மலரென்று எண்ணி சூழ்ந்த வண்டினங்கள் என்றும் பொருள் கொள்ளலாம். பிழைத்தார் பிழைப்பு அறியவல்ல அடி என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு, சுந்தரரின் திருவாரூர்ப் பதிகத்தின் (7.59) முதல் பாடலை நமக்கு நினைவுபடுத்துகின்றது. இந்த பாடலில், பெருமான் தனது பிழைகளை பொறுப்பதாகவும், தான் தவறுகள் செய்வதை தவிர்ப்பதாகவும் சுந்தரர் கூறுகின்றார்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே

இந்தப் பாடலில் அப்பர் பிரான் தவறு செய்யும் மனிதர்களின் தவறுகளை அறியும் ஆற்றல் படைத்த திருவடி என்று கூறுகின்றார். நம்மில் பலர் தாம் செய்யும் தவறுகள் எவருக்கும் தெரியாது என்று நினைக்கின்றனர். அவர்களது மனமும் திரும்பத் திரும்ப அதே தவற்றினைச் செய்யும் சமயத்தில், அந்தச் செய்கையை தவறு என்றே கருதவதில்லை. ஆனால் இறைவனிடமிருந்து நாம் எந்தத் தவற்றினையும் மறைக்க முடியாது. எனவே நாம் தவறுகள் செய்யாமல் இருப்பதே நமக்கு நல்லது என்பதை உணர்த்தும் பாடல் இது. சிவபிரான் மீது ஆழமான பக்தி கொண்டவர்கள், அவர்கள் வழிபாடு செய்யும் போது செய்யும் செய்கைகள், தங்களை மறந்து ஆடுதல், குரல் விம்முதல், கண்ணீர் பொழிய வழிபடல், உடல் நடுங்குதல் போன்ற செயல்கள் பித்தர்கள் செயல்கள்போல் காணப்படுவதால், அத்தகைய அடியார்களை பெரும்பித்தர் என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார்.

நமது செயல்களை எல்லாம் அறிந்து கொள்ளும் திறம் படைத்த இறைவனை திருமூலர் கண்காணி என்று அழைக்கின்றார். நம்மை கண்காணிப்பர் எவரும் இல்லை என்ற நினைப்பில் தவறுகள் செய்யும் நாம், நமக்கு மேல் கண்காணி இருப்பதை உணர்ந்தால் தவறு செய்யமாட்டோம் என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே

பொழிப்புரை

தாமரை அரும்பினை மலரவைக்கும் சூரியனின் நிறத்தையும் ஒளியையும் ஒத்துக் காணப்படும் திருவடிகள் பெருமானின் திருவடிகள் ஆகும். எந்த ஓவியத்திலும் தீட்டமுடியாத அழகு வாய்ந்த அந்த திருவடிகள் அடியார்களுக்கு அருள் புரியும் திருவடிகள். அடியார்கள் தூவிச் தொழுத புதுமலர்களின் தேனை உண்பதற்காக வண்டுகள் சூழ்ந்த திருவடிகள். தக்க யாகத்தில் பங்கேற்றதற்காக சந்திரனை காலால் தேய்த்தும், தனது அடியான் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை காலால் உதைத்தும் வெகுண்ட திருவடிகள். மறுபடியும் மறுபடியும் பெருமானின் நாமத்தை இடையறாது சொல்லியவாறு, பித்தர்கள் போன்று காணப்படும் அடியார்கள், பெருமையுடன் போற்றும் திருவடிகள். தனது அடியார்கள் பிழை புரிந்தால் அதனை பொறுத்துக் கொண்டும், பிழைகள் புரியும் நிலையை முன்னரே அறிந்து கொண்டு அந்த பிழைகளை தவிர்த்தும் அடியார்களுக்கு அருளும் திருவடிகள். இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகள், தெளிந்த நீரினை உடைய தென்கெடில நதிக்கரையில் அமைந்துள்ள திருவதிகை நாட்டின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள். அவன்தான் அதிகை திருவீரட்டானத்தின் செல்வனாக விளங்குகின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.