முகப்பு
தினம் ஒரு தேவாரம்

14. அரவணையான் சிந்தித்து - பாடல் 6

செந்தாமரை மலர் திருமகளின் உறைவிடமாக கருதப்படுகின்றது. பெருமானின் திருவடிகளிலும் திருமகள் உறைவதால்,

Updated On : 29 ஜனவரி, 2016 at 12:57 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 9:57 PM

திருமகட்கு செந்தாமரையாம் அடி சிறந்தவர்க்குத்
தேனாய்விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார்
புகழ் தகைய வல்ல அடி
உருவிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி
உருவென்று உணரப்படாத அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து
எம் செல்வன் அடி

விளக்கம்

செந்தாமரை மலர் திருமகளின் உறைவிடமாக கருதப்படுகின்றது. பெருமானின் திருவடிகளிலும் திருமகள் உறைவதால், பெருமானின் திருவடிகள் செந்தாமரை என்று இங்கே கூறப்படுகின்றது. இறைவன் தனது இடது பாகத்தில் உமையம்மையை ஏந்தி இருப்பதால், பெருமானின் இடது திருவடி, அம்மையின் திருவடியாக கருதப்பட்டு, வலது திருவடியும் இடது திருவடியும் ஒன்றுக்கொன்று ஒவ்வாமால், வேறுபாடு உடையவையாக இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது. இவ்வாறு இந்தப் பாடலிலும் இறைவன் மங்கைபங்கனாக இருக்கும் நிலை உணர்த்தப்படுகின்றது. பொருளவர் = சைவ சித்தாந்தத்தின் அடிப்படைப் பொருளை உணர்ந்தவர்கள்.

பொழிப்புரை

திருமகள் செந்தாமரை எனக் கருதி உறையும் திருவடிகள் பெருமானின் திருவடிகள்: அவை சிறந்த அடியார்களுக்கு தேனாக இனிக்கின்றன. சைவ சித்தாந்தத்தின் அடிப்படைப் பொருளை உணர்ந்த சான்றோர்கள் பொன் போன்று உயர்ந்த பொருளாக கருதப்படுபவை இறைவனின் திருவடிகள். புகழ்பவர்கள் எவ்வளவு புகழ்ந்தாலும், எல்லையை அடைய முடியாத பெருமையினை உடைய திருவடிகள். பெருமான் தனது பாதி உடலில் பார்வதி தேவியைக் கொண்டிருப்பதால், பெருமானின் இரண்டு திருவடிகளும் ஒன்றுக்கொன்று வேறுபாடு உள்ளவையாக காணப்படுகின்றன. உருவம் என்ற நிலையைக் கடந்தவை இந்த திருவடிகள். இத்தகைய பெருமைகள் வாய்ந்த திருவடிகள், தென்கெடில நதிக்கரையில் அமைந்துள்ள திருவதிகை நாட்டின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள். அவன் தான் அதிகை திருவீரட்டானத்தின் செல்வனாக விளங்குகின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.