முகப்பு
தினம் ஒரு தேவாரம்

14. அரவணையான் சிந்தித்து - பாடல் 7

பலராலும் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்கள் உடையவை திருவடிகள். பலராலும் புகழ்ந்து பாடப்பட்டாலும், பாடல்களில் உள்ள சொற்களால் முழுமையாக உணரப்படாத

Updated On : 29 ஜனவரி, 2016 at 1:11 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 9:58 PM

உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால்
உணரப் படாத அடி
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள் தாம்
வணங்கி வாழ்த்தும் அடி
அரை மாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார்
இல்லா அடி
கரை மாங் கலிக் கெடில நாடன் அடி கமழ் வீரட்டானக்
கபாலி அடி

விளக்கம்

கலி = நீராடும் மக்கள் செய்யும் ஆரவாரம். அரை மாத்திரை = நுண்ணிய பொருள். அரை மாத்திரை என்பதற்கு பிரணவ மந்திரத்தின் ஒரு பகுதி என்றும் கூறுவார்கள். பிரணவ மந்திரத்தின் இறுதி எழுத்தாகிய ம் எனப்படும் மெய்யெழுத்து பெருமானின் திருவடிகளை குறிப்பதாக கூறுவார்கள்.

பொழிப்புரை

பலராலும் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்கள் உடையவை திருவடிகள். பலராலும் புகழ்ந்து பாடப்பட்டாலும், பாடல்களில் உள்ள சொற்களால் முழுமையாக உணரப்படாத திருவடிகள் அவை. மலைமகளாகிய பார்வதி தேவி, மனம் வருந்தாத வண்ணம், என்றும் பிரியாதவாறு அம்மையைத் தனது உடலில் ஏற்றுக்கொண்டவனின் திருவடிகள் அவை: வானவர்கள் வணங்கி வாழ்த்தும் திருவடிகள் அவை. மிகவும் நுண்ணிய பொருட்களிலும் அடங்கி நிற்கும் திருவடிகள். பரப்பு எத்தகையது என்பதை எவரும் அளக்க இயலாதவாறு, பரந்து நிற்கும் திருவடிகள். இத்தகைய பெருமையினை உடைய திருவடிகள், நிறைந்த மாமரங்களைக் கொண்ட கரையினை உடைய கெடில நதியில் ஆராவரம் செய்தவாறு குளிக்கும் மக்கள் வசிக்கும் திருவதிகை நகரின் தலைவனாகிய பெருமானது திருவடிகள். நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த வீரட்டானத்தில் உறையும் சிவபெருமான், பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தியவராக காபாலி என்ற பெயருடன் விளங்குகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.