14. அரவணையான் சிந்தித்து - பாடல் 9
இனிய இசை பாடும் அடியார்களை உடையதும் குளிர்ந்த கெடில நதி பாய்வதும் ஆகிய அதிகை வீரட்டத்தின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள் பல பெருமைகளை உடையன.
அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு
ஆரமுதம் ஆய அடி
பணிபவர்க்குப் பாங்காக வல்ல அடி பற்றற்றார்
பற்றும் பவள அடி
மணி அடி பொன்னடி மாண்பாம் அடி மருந்தாய்ப்
பிணி தீர்க்க வல்ல அடி
தணிபாடு தண்கெடில நாடன் அடி தகை சார்
வீரட்டத் தலைவன் அடி

விளக்கம்

தணி = இனிய இசை. தகை சார் = பெருமை பொருந்திய.

பொழிப்புரை

இனிய இசை பாடும் அடியார்களை உடையதும் குளிர்ந்த கெடில நதி பாய்வதும் ஆகிய அதிகை வீரட்டத்தின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள் பல பெருமைகளை உடையன. பெருமானது திருவடிகள், அவரது அடியார்களுக்கு மிகவும் அருகில் உள்ளன. அடியார்கள் அல்லாதவர்க்கு தூரத்தில் அமைந்திருப்பவை. கிடைத்தற்கு அரிய அமுதம் போன்று அடியார்களுக்கு இனிமையாக அமைந்துள்ள திருவடிகள். தன்னைத் தொழும் அடியார்களுக்கு பக்கத் துணையாக இருப்பவை அந்தத் திருவடிகள். உலகப் பற்றினை அறுத்த சான்றோர்கள் விருப்பத்துடன் பற்றும் திருவடிகள் அவை. விலை உயர்ந்த மணிகள் போலவும் பொன் போலவும், மதிக்க முடியாத பெருமை உடையவை அந்தத் திருவடிகள் அடியார்களின் பிறவிப் பிணியை அடியோடு அறுத்துத் தீர்க்கும் வல்லமை பெற்றவை அந்தத் திருவடிகள்.