15. கோணல் மாமதி - பாடல் 2
பண்ணின் வடிவமாக அமைந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவனும், பவளத்தின் குவியலைப் போன்ற நிறத்தினை உடைய மேனியை உடையவனும்
பாடல் 2
பண்ணினை பவளத் திரள் மாமணி
அண்ணலை அமரர் தொழும் ஆதியைத்
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம்
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

திரள் = தொகுதி, குவியல். நண்ணுதல் = அருகில் செல்லுதல்., இங்கே அருகே சென்று தொழுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். அண்ணல் = தலைவன். சிறந்த பெருமையினை உடையவன். சுண்ணம் என்றால் பொதுவாக நறுமணம் கலந்த வாசனைப் பொடியினை குறிக்கும். பலவிதமான வாசனைப் பொடிகளும் மஞ்சளும் கலந்த சுண்ணப்பொடி வண்ணத்துடன் விளங்கும். ஆனால் இங்கே வெண்பொடி என்று குறிப்பிட்டு இருப்பதால், நறுமணம் வீசும் திருநீற்றினை குறிப்பதாக உள்ளது.

பொழிப்புரை

பண்ணின் வடிவமாக அமைந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவனும், பவளத்தின் குவியலைப் போன்ற நிறத்தினை உடைய மேனியை உடையவனும், அனைவர்க்கும் தலைவனாகத் திகழ்பவனும், தேவர்களால் தொழப்படும் ஆதி முதல்வனும், நறுமணம் வீசும் திருநீற்றுப் பொடியினை உடலில் பூசியவனும் ஆகிய வீரட்டத்து பெருமானின் அருகில் சென்று அவனைத் தொழுதால் தான் என் கண்கள் துயில் கொள்ளும். எனவே நான் அடிக்கடி, அவனருகே சென்று அவனைத் தொழுகின்றேன்.

Advertisement