முகப்பு
தினம் ஒரு தேவாரம்

15. கோணல் மாமதி - பாடல் 4

இளம் பிறைச் சந்திரனைச் சூடியவரும், அனைத்து தேவர்களுக்கும் முதன்மையானவரும், தேவர்களின் மீது பகை கொண்ட திரிபுரத்து அரக்கர்களின்

Updated On : 9 பிப்ரவரி, 2016 at 2:22 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:01 PM

பாடல் 4

முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழும் திரிபுரம் தீயெழ
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம்
கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

முற்றா = இளைய. செற்றார் = பகைவர்.

பொழிப்புரை

இளம் பிறைச் சந்திரனைச் சூடியவரும், அனைத்து தேவர்களுக்கும் முதன்மையானவரும், தேவர்களின் மீது பகை கொண்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் எரிந்து அழியுமாறு அம்பினை எய்தவரும் ஆகிய பெருமான், அதிகை வீரட்டத்தில் உறைகின்றார். அவர் உறையும் அதிகை வீரட்டத்தின் சிறப்பினையும், ஆங்கே உறையும் பெருமானின் பெருமைகளையும் கற்றால் தான் எனது கண்கள் துயில் கொள்ளும். எனவே நான் வீரட்டத்துப் பெருமானின் பெருமைகளை கற்கின்றேன்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.