முகப்பு
தினம் ஒரு தேவாரம்

15. கோணல் மாமதி - பாடல் 6

வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரையும், ஊமத்தை மலரையும் அணிந்து, நாளுக்கு நாள் அழகு வளரும் சடையில் அழகிய சந்திரனையும் பாம்பினையும்

Updated On : 15 பிப்ரவரி, 2016 at 3:58 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:02 PM

பாடல் 6

வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடை
கொண்டான் கோல மதியோடு அரவமும்
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

மத்தம் = ஊமத்தை மலர். கோல = அழகிய. விண்டார் = பகைவர். வளர்சடை = நாளுக்கு நாள் அழகு வளரும் சடை.

பொழிப்புரை

வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரையும், ஊமத்தை மலரையும் அணிந்து, நாளுக்கு நாள் அழகு வளரும் சடையில் அழகிய சந்திரனையும் பாம்பினையும் அணிந்தவரும், பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்தவரும் ஆகிய சிவபெருமான் திருவதிகை வீரட்டத்தில் உறைகின்றார். திருவதிகை வீரட்டத்துத் திருக்கோயிலையும், ஆங்கே வீற்றிருக்கும் வீரட்டேச்வரரையும் கண்டால்தான் எனது கண்கள் துயில் கொள்ளும். எனவே நான் பலமுறையும் வீரட்டத்து இறைவரை காண்பேன்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.