15. கோணல் மாமதி - பாடல் 8
தனது அகலமான தோள்களில் திருநீற்றினை அணிந்தவனும், நின்மலனும், இடபத்தைத் தனது சின்னமாக கொடியில்
பாடல் 8
நீறுடைத் தடம் தோளுடை நின்மலன்
ஆறுடைப் புனல் பாய் கெடிலக்கரை
ஏறுடைக் கொடியான் திரு வீரட்டம்
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

தடம் = அகன்ற. நின்மலன் = மலமற்றவன்.

பொழிப்புரை

தனது அகலமான தோள்களில் திருநீற்றினை அணிந்தவனும், நின்மலனும், இடபத்தைத் தனது சின்னமாக கொடியில் ஏந்தியவனும் ஆகிய சிவபெருமான், பல கால்வாய்களை உடைய கெடில ஆற்றின் கரையில் உள்ள வீரட்டானத்து திருக்கோயிலில் உறைகின்றான். அந்த திருக்கோயிலைப் பற்றியும் அங்கே உறைகின்ற பெருமானைப் பற்றியும் கூறாவிடில் எனது கண்கள் உறக்கம் கொள்ளாது. எனவே நான் தினமும் அந்த பெருமானது சிறப்புகளைக் கூறுவேன்.

Advertisement