முகப்பு
தினம் ஒரு தேவாரம்

16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 4

எட்டு வகையான பூங்கொத்துக்களைத் தனது திருவடிகளில் சாத்தி, தங்களது உடலினை வளைத்து வணங்கி வழிபடும் அடியார்களைப் பற்றியுள்ள வல்லமை

Updated On : 23 பிப்ரவரி, 2016 at 5:47 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:08 PM

பாடல் 4

பூங்கொத்து ஆயின மூன்றோடு ஓர் ஐந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்
வீங்கு தண்புனல் பாய் கெடிலக்கரை
வேங்கைத் தோல் உடை ஆடை வீரட்டரே

விளக்கம்

வாங்கி = வளைந்து. வீங்கி = பெருகிய.

பொழிப்புரை

எட்டு வகையான பூங்கொத்துக்களைத் தனது திருவடிகளில் சாத்தி, தங்களது உடலினை வளைத்து வணங்கி வழிபடும் அடியார்களைப் பற்றியுள்ள வல்லமை வாய்ந்த வினைகளையும் ஓட்டும் திறமை படைத்தவர் சிவபெருமான். எனவே பெருகிய நீரினைக் கொண்டு பாயும் கெடிலக்கரையில் உறைபவரும், தன்னைக் கொல்ல வந்த வேங்கையின் தோலினை உரித்து ஆடையாக உடுத்தியவரும் ஆகிய வீரட்டத்து இறைவன் சிவபெருமானை எட்டு மலர்களைக் கொண்டு வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.