முகப்பு
தினம் ஒரு தேவாரம்

16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 6

எண் ஏழினை தனக்கு முன்னதாகக் கொண்ட எட்டு மலர்களைக் கொண்டு தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களின் வினைகளை,

Updated On : 24 பிப்ரவரி, 2016 at 12:19 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:09 PM

பாடல் 6

ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை ஓட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய் கெடிலக்கரை
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே

விளக்கம்

தொன்மை = முன்னே உடையது. ஏழித் தொன் = ஏழினை முன்னதாக கொண்ட எண், எட்டு. ஊழித் தொல்வினை = ஊழிக் காலம் முடிந்த பின்னர் தோன்றிய நாட்கள் தொட்டு எடுத்த பல பிறவிகளில் சேமித்த ஊழ்வினைகள். பாழி = வலிமை, வேகம்.

பொழிப்புரை

எண் ஏழினை தனக்கு முன்னதாகக் கொண்ட எட்டு மலர்களைக் கொண்டு தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களின் வினைகளை, ஊழிக் காலம் முடிந்து படைப்புத் தொழில் தொடங்கப்பட்ட நாள் முதல் எடுத்த எண்ணற்ற பிறவிகளில் சேமித்துவைத்த உயிர்களின் வினைகளை, ஓடுமாறு விரட்ட வல்லவர் சிவபெருமான் ஆவார். எனவே மிகுந்த வேகத்துடன் பாயும் குளிர்ந்த தண்ணீரினை உடைய கெடிலக் கரையில் அமர்ந்துள்ளவரும், தன்னைக் கொல்ல வந்த மதயானையின் தோலை உரித்துப் போர்த்தவரும் ஆகிய அதிகை வீரட்டத்துப் பெருமானை எட்டு மலர்களைக் கொண்டு வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.