16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 8
தேன் நிறைந்து காணப்படுவதால் எப்போதும் ரீங்காரமிட்டு ஒலி எழுப்பியவாறு வண்டுகள் சுற்றித் திரியும் சிறந்த
பாடல் 8
ஒலி வண்டறை ஒண்மலர் எட்டினால்
காலை ஏத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்து இழியும் கெடிலக்கரை
வேலி சூழ்ந்து அழகாய வீரட்டரே

விளக்கம்

ஒலி வண்டறை = தனது ரீங்காரத்தினால் ஓசை எழுப்பும் வண்டுகள். ஆலி = ஆரவாரத்துடன். ஒண்மலர் = சிறந்த மலர்கள்.

பொழிப்புரை

தேன் நிறைந்து காணப்படுவதால் எப்போதும் ரீங்காரமிட்டு ஒலி எழுப்பியவாறு வண்டுகள் சுற்றித் திரியும் சிறந்த எட்டு வகையான மலர்களைக் கொண்டு தினமும் காலையில் இறைவனை வழிபடும் அடியார்களின் வினைகளைக் கழிப்பவர் அதிகை வீரட்டத்து இறைவர். எனவே, மிகுந்த ஆரவாரத்துடன் பாயும் கெடிலநதி வேலி போன்று சூழும் திருவதிகை நகரில் உறையும் வீரட்டரை, எட்டு மலர்களைக் கொண்டு அவரை வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

Advertisement