முகப்பு
தினம் ஒரு தேவாரம்

17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 2

வீழிமிழலைப் பெருமானைச் சேராத மனிதர்கள் தீநெறிக்கே சேர்கின்றார் என்று பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் முடியுமாறு அப்பர் பிரான் அருளிய திருத்தாண்டகத்தின் முதல் பாடலை

Updated On : 4 மார்ச், 2016 at 12:09 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM

பாடல் 2

சந்தியானை சமாதி செய்வார்கள் தங்கள்
புந்தியானைப் புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை ஆமாத்தூர் அழகனை
சிந்தியாதவர் தீவினையாளரே

விளக்கம்

அழகிய நாதர் என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமம். இதனை உணர்த்தும் வகையில் இந்த பதிகத்தில் ஆமாத்தூர் அழகன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சமாதி = தியானத்தில் ஆழும் நிலை. புந்தி = மனம். புத்தேளிர் = தேவர்கள். அந்தியான் = அந்தி வண்ணத்தவன், அந்தி நேரத்தில் காணப்படும் செவ்வானத்தின் வண்ணத்தவன். பெருமானைச் சிந்தியாதவர்கள் தீவினையாளர்கள் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு கீழ்க்கண்ட திருமந்திரப் பாடலை நினைவூட்டுகின்றது. நமது தீவினைகள் நம்மை சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்ல விடாது தடுக்கும் என்றும், நாம் அந்த தீவினைகளின் தாக்கத்தையும் மீறி அவனது திருநாமத்தைச் சொன்னால் தீவினைகள் அழிந்துவிடும் என்றும் இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார். ஆன்மாவைப் பிணித்துள்ள தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதாக வழி வகுக்கும் நெறி சிவகதி எனப்படுகின்றது.

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே

வீழிமிழலைப் பெருமானைச் சேராத மனிதர்கள் தீநெறிக்கே சேர்கின்றார் என்று பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் முடியுமாறு அப்பர் பிரான் அருளிய திருத்தாண்டகத்தின் முதல் பாடலை (6.50.1) நாம் இங்கே காண்போம். பகல் = சூரியன்; பல்லுயிராய் = அனைத்து உயிர்களுடன் இணைந்து இருக்கும் தன்மை. இந்த பாடலில் இறைவன் அட்ட மூர்த்தியாய் இருக்கும் தன்மை உணர்த்தப்படுகின்றது. சிவபெருமான் முப்புரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்றபோது, பெருமான் செல்லவிருந்த தேரின் பல பாகங்களாக பல தெய்வங்கள் பங்கேற்றமை, தெய்வத் தேர் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.

போரானை ஈருரிவைப் போர்வையானைப் புலி அதளே உடை ஆடை போற்றினானைப்
பாரானை மதியானைப் பகல் ஆனானைப் பல்லுயிராய் நெடு வெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

சிவபெருமானை சிந்தியாதவர்கள் தீநெறியினை சென்று அடைவதும் மட்டுமன்றி, அவர்களால் நன்னெறியினைச் சாராவும் முடியாது என்ற திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பதிகத்தின் (6.66) கடைப் பாடலை நாம் இங்கே காண்போம். சிவபெருமானின் திருவடிகளைச் சரணாக அடைந்தவர்கள் தங்களது பாவங்கள் தீர்க்கப் பெறுவார்கள் என்றும் கூறும் அப்பர் பிரான், அவனைச் சாராது இருப்போர்கள் நன்னெறியில் செல்ல முடியாமல் தவிப்பார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். சீர்த்தான்=சீரினை உடையவன், புகழினை உடையவன்

சீர்த்தானை உலகேழும் சிறந்து போற்றச் சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன் தன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப் பனிமதியம் சடையானைப் புனிதன் தன்னை
ஆர்த்தோடி மலை எடுத்த அரக்கன் அஞ்ச அருவிரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம்
தீர்த்தானை திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே

பொழிப்புரை

காலை, நண்பகல் மற்றும் மாலை ஆகிய சந்தி நேரங்களில் தொண்டர்களால் வழிபடப்படுபவனும், தன்னை நினைத்து தியானம் செய்து சமாதி நிலையில் ஆழும் அடியார்களின் மனதினில் நிலை பெற்று இருப்பவனும், தேவர்களால் தொழப்படுபவனும் ஆகிய ஆமாத்தூர் அழகன் அந்தி வானம் போன்று சிவந்த நிறம் கொண்ட மேனியை உடையவன். இந்த ஆமாத்தூர் அழகனை சிந்தியாதவர்கள் தீவினையால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.