முகப்பு
தினம் ஒரு தேவாரம்

17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 6

அடியார்கள் பால் பேரன்பு கொண்ட சிவபெருமான், பித்தன் என்று மற்றவர்கள் எண்ணும் வண்ணம்,

Updated On : 4 மார்ச், 2016 at 12:18 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:14 PM

பாடல் 6

பித்தனைப் பெருந்தேவர் தொழப்படும்
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை அடியேன் உள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே

விளக்கம்

முயறல் = உள்ளே வைத்து அழுந்த மூடுதல்.

பொழிப்புரை

அடியார்கள் பால் பேரன்பு கொண்ட சிவபெருமான், பித்தன் என்று மற்றவர்கள் எண்ணும் வண்ணம், எல்லையில்லாத இன்பங்களை அவர் அடியார்களுக்கு வழங்குகின்றார். அவர் திருமால், பிரமன் மற்றும் இந்திரன் முதலான பெரிய தேவர்களால் தொழப்படும் தலைவனாக விளங்குகின்றார், அழகிய ஆமாத்தூர் தலத்தில் மிகவும் விரும்பி. உறையும் இறைவனை, முத்து போன்று அரிதானவனை, அடியேன் எனது ஆழ் மனதினில் வைத்து தியானிக்க, எனது உள்ளத்தில் அந்த இறைவனிடத்தில் அன்பும் பக்தியும் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. நீங்களும் இறைவனை நினைத்து அவரை வழிபட்டால், உங்களது மனதினில் பக்தி வெள்ளம் பெருக்கெடுப்பதை உணரலாம்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.