முகப்பு
தினம் ஒரு தேவாரம்

23. கருமணியை கனகத்தின் - பாடல் 9

பொன் மயமான தூண் போன்று விளங்குபவனை, புலால் நாற்றம் வீசும் கபாலத்தினை ஏந்தி அனைத்து

Updated On : 27 ஏப்ரல், 2016 at 2:38 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:41 PM

பாடல் 9

பொற்றூணைப் புலால் நாறு கபாலம் ஏந்திப் புவலோகம்
எல்லாம் உழி தந்தானை
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூவுலகும்
முடிவு ஒன்றில்லா
கற்றூணைக் காளத்தி மலையான் தன்னைக் கருதாதார் புரம்
மூன்றும் எரிய அம்பால்
செற்றானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

புவலோகம் = புவலோகம் முதலான மேல் உலகங்கள். உழி தந்தான் = திரிபவன். முற்றிலும் தேய்ந்து ஒரு பிறையுடன் பெருமானிடம் சந்திரன் அடைக்கலம் புகுந்த நிகழ்ச்சி, முற்றாத வெண் திங்கள் கண்ணியான் என்று இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை

பொன் மயமான தூண் போன்று விளங்குபவனை, புலால் நாற்றம் வீசும் கபாலத்தினை ஏந்தி அனைத்து உலகங்களிலும் பலி கொள்வதற்காகத் திரிபவனும், இளம்பிறையாக தன்னிடம் சரண் அடைந்த சந்திரனைத் தனது சடையில் மாலையாக அணிந்தவனும், அனைத்துப் பொருட்களுக்கும் முழுமுதற் பொருளாக விளங்குபவனும், நிலவுலகம், மேலுலகம் மற்றும் பாதாளம் ஆகிய மூன்று உலகங்களிலும் கலந்து இருப்பவனும், முடிவேதும் இன்றி நிலையான கல் தூணாக இருப்பவனும், காளத்தி மலையில் உறைபவனும், தன்னை நினைக்காத திரிபுரத்து அரக்கர்கள் மூவரின் கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்து அவர்களை வெற்றி கொண்டவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.