24. கருநட்ட கண்டனை - பாடல் 6
இந்தப் பாடல் ஒரு தாயின் கூற்றாக அமைந்துள்ளது. நடமாடும் சிவபிரானின் அழகினையும், அவனது நடனத்தின் நேர்த்தியையும்
பாடல் 6
பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரி கணங்கள்
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறட் பூத கணம்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து
கூத்தனில் கூத்து வல்லார் உளரோ என்றன் கோல் வளைக்கே
விளக்கம்
Advertisement
பொற்சடை = பொல்+சடை, பொலிகின்ற சடை. புரி கணம் = விரும்பும் அடியார் கூட்டம். ஆர்த்தல் = ஆரவாரம் செய்தல். அரித்தல் = வாத்தியங்கள் முழங்குதல்.
இந்தப் பாடல் ஒரு தாயின் கூற்றாக அமைந்துள்ளது. நடமாடும் சிவபிரானின் அழகினையும், அவனது நடனத்தின் நேர்த்தியையும் காணும் தாய், நடனத்தில் சிறந்த ஒருவனே தனது மகளுக்கு கணவனாக வரவேண்டும் என்று விரும்பிய தாய், சிவபிரானை விட நடனத்தில் சிறந்தவர் வேறு எவரும் உளரோ என்று அதிசயப்படுகின்றாள்.
பொழிப்புரை
பொன் போல் பூத்துக் குலுங்கும் பொலிவுடைய சடையை உடைய சிவபிரானது நடனம் கண்டு அவரை விரும்பும் அடியார் கூட்டம் ஆரவாரம் செய்ய, பூத கணங்கள் பல வகையான வாத்தியங்கள் கொண்டு முழங்க, வண்டுகள் தேம் தேம் என்று இசை பாட குளிர்ந்த சோலைகள் கொண்ட சிற்றம்பலத்தில் நடனமாடும் சிவபிரானை விடவும் நடனத்தில் உயர்ந்தவர் எவரேனும் என் மகளுக்கு கணவராக வர தகுதி படைத்தவராக உள்ளாரோ?.
</p>