25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 2
மூங்கில் போன்ற மென்மையான தோள்களை உடைய உமாதேவியை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, எவரும் தங்களது அறிவினைக் கொண்டு அறிய
பாடல் 2
கருத்தனாய் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருவுரு உடைய சோதீ
திருத்தமாம் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்த நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே

விளக்கம்

காம்பு = மூங்கில். கருத்தன் = ஒன்றிய கருத்து உடையவன். கருத்தனாய் பாடுதல் என்றால், பாடும் பாடலின் பொருளை புரிந்துகொண்டு அந்த பொருளில் உள்ளம் ஒன்றி பாடுதல் என்று பொருள். கையொன்று செய்ய, மனம் ஒன்று நினைக்க, நாவொன்று பாடுதல் வழிபாடாகாது. ஒன்றியிருந்து நினைமின்கள் என்று தனது கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் நமக்கு அறிவுரை கூறும் அப்பர் பிரான் உள்ளம் ஒன்றியே அனைத்துப் பாடல்களை பாடியிருந்தாலும், மனம் ஒன்றி பாடவேண்டும் என்ற கருத்தினை நமக்கு வலியுறுத்துவதற்காக, இங்கே இவ்வாறு கூறியுள்ளார். திருத்தம் என்றால் திருத்துதல் என்று பொருள். உயிர்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்துக்கொண்டு அந்த உயிர்களை நல்வழிப் படுத்தும் சிவபிரான் உறையும் தில்லைநகர் என்பதால் திருத்தமாம் தில்லை என்று இங்கே கூறப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கூறுவார்கள்.

சிவபிரான் அறிவுக்கு எட்டாதவன். ஆனால் பக்தியுடன் அணுகும் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மை கொண்டவன். தங்களது அறிவிலும் திறமையிலும் நம்பிக்கை கொண்டவர்களாக பிரமன் திருமால் ஆகிய இருவரும் அடிமுடி தேடிய போது அவர்களுக்கு அகப்படாத சிவபிரான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பின்னர் அவர்களுக்கு காட்சி கொடுக்கின்றான். மணிவாசகர், திருவாசகத்தில் பத்தி வலையில் படுவோன் என்று சிவபிரானைக் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

மூங்கில் போன்ற மென்மையான தோள்களை உடைய உமாதேவியை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, எவரும் தங்களது அறிவினைக் கொண்டு அறிய முடியாத திருவடிவத்தை உடைய சோதியே, நான் பாடும் பாட்டின் பொருளில் மனம் ஒன்றி உன்னை பாடமாட்டேன். தூய்மையான தில்லை மாநகரில் பொலிந்து விளங்கும் சிற்றம்பலம் தன்னில் ஆடும் திருக்கூத்தினை நான் நேரே காண்பதற்காக வந்துகொண்டு இருக்கின்றேன்.

Advertisement