முகப்பு
தினம் ஒரு தேவாரம்

25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 5

சிவபிரானே பல தலங்களுக்கும் சென்று உனது திருவுருவத்தை ஆங்காங்கே கண்டு களித்து, உனது திருப்பாதங்களை எனது கருத்திலே நிலையாக நிறுத்தி, உனது புகழ்

Updated On : 18 மே, 2016 at 5:20 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:49 PM

பாடல் 5

கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்றன் பாதம்
கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன் குறிப்பினாலே
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடுமாறே

விளக்கம்

மூன்றாவது பாடலில் அந்நாள்வரை தான் கேளாதிருந்த சிவபிரானின் திருநடனச் சிறப்பினை, தொண்டர்கள் மூலம் கேட்டறிந்த தான், தனது நெஞ்சத்தினில் நிலையாக நிறுத்தியதாக கூறும் அப்பர் பிரான் அதற்குப் பின்னர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே கூறுகின்றார். தான் தனது அனுபவத்தால் கண்ட இறைவனது திருக்கோலத்தையும், அவனைப் பற்றிய சிந்தனைகளையும் தினமும் தனது நெஞ்சத்தினில் நினைந்து நினைந்து ஆடியதாகவும் பாடியதாவும் கூறுகின்றார். இவ்வாறு சிவபிரானின் பெருமைகளை மனதினில் நினைத்து தன்னை மறந்து ஆடுவதும் பாடுவதும் தலைசிறந்த பக்தர்களின் குணமாகும். அவ்வாறு தான் இருப்பதற்கும் சிவபிரானின் திருவருளே காரணம் என்று இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை

சிவபிரானே பல தலங்களுக்கும் சென்று உனது திருவுருவத்தை ஆங்காங்கே கண்டு களித்து, உனது திருப்பாதங்களை எனது கருத்திலே நிலையாக நிறுத்தி, உனது புகழ் கூறும் பாடல்களைக் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும், உனது திருவருள் கூட்டியவண்ணம், உன்னை நான் கூடுவேன். வண்டுகள் ரீங்காரமிட்டு இசைக்கும் சோலைகள் நிறைந்த தில்லை நகரில் சிற்றம்பலத்தில் எட்டுத் திசைகளிலும் இருப்பவர்கள் உன்னை துதிக்குமாறு இறைவனே நீ நடமாடுகின்றாய்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.