36. வீறு தானுடை வெற்பன் - பாடல் 6
ஒளி மிளிரும் சூலம் பொருந்திய கையினை
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:43 PM
பாடல் 6
சூலம் மல்கிய கையும் சுடரொடு
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆலநீழலும் அம்ம அழகிதே
விளக்கம்
மல்கிய = பொருந்திய, நிறைந்த.
பொழிப்புரை
ஒளி மிளிரும் சூலம் பொருந்திய கையினை உடையவனும், பசுவிலிருந்து கிடைக்கப்பெரும் பால், தயிர், நெய், கோசலம், கோமியம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடும் தன்மை கொண்டவனும், உலகம் புகழும் நாரையூர் தலத்தில் உறையும் நம்பனும் ஆகிய பெருமானுக்கு, ஆலநீழலில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த செய்கையும், வியப்பினை நல்கும் வண்ணம் அழகினைச் சேர்க்கின்றது.