முகப்பு
தினம் ஒரு தேவாரம்

36. வீறு தானுடை வெற்பன் - பாடல் 7

இசையோடு பொருந்திய நான்மறைகளை

Updated On : 16 செப்டம்பர், 2016 at 3:00 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:43 PM

பாடல் 7


    பண்ணின் நால்மறை பாடலோடு ஆடலும்
    எண்ணிலார் புரம் மூன்று எரி செய்தலும்
    நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர்
    அண்ணலார் செய்கை அம்ம அழகிதே


விளக்கம்

எண்ணிலார் = தெய்வ நெறியினையும் சிவபெருமானையும் நினையாத முப்புரத்து அரக்கர்கள்.

பொழிப்புரை

இசையோடு பொருந்திய நான்மறைகளை பாடுபவரும், அந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடுபவரும், தெய்வ நெறியினை நினையாத திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளை சிரித்தே எரித்தவரும், தன்னை அணுகும் அடியார்களின் துயர் தீர்ப்பவரும் ஆகிய, நாரையூர் அண்ணலின் செய்கைகள் அனைத்தும் அழகாக அமைந்துள்ளன. மேலும் இந்த செய்கைகள் மிகுந்த வியப்பினையும் ஏற்படுத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.