முகப்பு
தினம் ஒரு தேவாரம்

137. ஓங்கிமேல் உழிதரு  - பாடல் 3

றைச் சந்திரனையும்

Updated On : 21 ஆகஸ்ட், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:25 PM

பாடல் 3:

    மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு  வார்சடை மேல்
    கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல் கபாலியார் தாம்
    இழை வளர் துகில் அல்குல் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    விழை வளர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

விளக்கம்:

Advertisement

மழை=குளிர்ச்சி; விழை=விருப்பம்; கழை=கரும்பு; இழைவளர் துகில்=பஞ்சின் இழைகள் சேர்ந்த ஆடை, பருத்தி ஆடை;

பொழிப்புரை:

குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனையும் கொன்றை முதலான மலர்களையும், வெண் தலையையும் தனது நீண்ட சடையில் பொருத்தியுள்ள பெருமான், கரும்பு முதலான பயிர்களை வளர்க்கும் நீர்ப்பெருக்கினை உடைய கங்கை நதியும் தனது சடையினில் புகுந்து மறையக் கண்டவர் ஆவார். அவர் தனது நெற்றியில் ஒரு கண்ணினை உடையவராய், தனது கையினில் கபாலம் ஏந்தியவராய், பஞ்சின் இழைகளால் நெய்யப்பட்ட ஆடையினைத் தனது மார்பினில் அணிந்துள்ள உமையன்னையுடன், மேலும் மேலும்  பெருகும் விருப்பத்துடன் பகலில் அமர்ந்துள்ள இடம் திருத்துருத்தி தலமாகும். அவர்  இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.