முகப்பு
தினம் ஒரு தேவாரம்

137. ஓங்கிமேல் உழிதரு  - பாடல் 7

உடலெங்கும் திருநீறு

Updated On : 25 ஆகஸ்ட், 2019 at 3:20 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:25 PM

பாடல் 7:

    புரிதரு சடையினர் புலியுரி அரையினர் பொடி அணிந்து
    திரிதரு இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார்
    வரிதரு வனமுலை மங்கையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    விரிதரு துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

விளக்கம்:

Advertisement

புரிதரு சடை=முறுக்கிய சடை; பொடி=திருநீறு; வரிதரு=வரிகளாக பூசப்பட்ட சந்தனக்  கீற்றுகள்;  வனமுலை= அழகிய மார்பகங்கள்;

பொழிப்புரை:

முறுக்கிய சடையை உடையவரும், புலித்தோலினை ஆடையாகத் தனது இடுப்பினில் அணிந்தவரும், உடலெங்கும் திருநீறு பூசியவராக உலகெங்கும் திரிந்து பலி ஏற்பவரும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீயினால் வளைத்து எரித்தவரும் ஆகிய பெருமான், வரிவரியாக தனது அழகிய மார்பகங்களில் சந்தனக் கீற்று பூசிய பார்வதி தேவியுடன் பகற்பொழுதினில் உறையும் இடம் திருத்துருத்தி தலமாகும். அவர்  இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.