முகப்பு
தினம் ஒரு தேவாரம்

134. மன்னியூர் இறை - பாடல் 8

பெண்பித்து கொண்டவனாக

Updated On : 24 ஜூலை, 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:07 PM

பாடல் 8:

    தூர்த்தனைச் செற்ற
    தீர்த்தன் அன்னியூர்
    ஆத்தமா அடைந்து
    ஏத்தி வாழ்மினே

விளக்கம்:

Advertisement

தீர்த்தன்=தூய்மை செய்பவன்; ஆத்தமா=அன்புடன்; ஆப்தம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. நெருங்கிய நண்பனை ஆப்தன் என்று சொல்வதுண்டு. தூர்த்தன்=காமி, பெண்பித்து கொண்டு அலைபவன்;

பொழிப்புரை:

பெண்பித்து கொண்டவனாக திகழ்ந்த அரக்கன் இராவணின் வலிமையைக் குன்றச் செய்து  அவனை வெற்றி கொண்ட பெருமான், அன்னியூர் தலத்தில் உறையும் பெருமான், தனது அடியார்களின் மலங்களைத் தீர்க்கும் புனிதனாக விளங்குகின்றான். அவனை உங்களது நெருங்கிய நண்பனாக கருதி அவன் பால் அன்பு வைத்து, அவனை புகழ்ந்து வாழ்த்துவீராக.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.