ஜனவரி 29
ஐடிசி குழுமத்தின் ஹோட்டல் தொழில் பிரிவு தனி நிறுவனமாக பிரிந்து ஐடிசி ஹோட்டல்ஸ் என்ற பெயரில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பங்குதாரர்கள் 10 ஐடிசி பங்குகளுக்கு 1 ஐடிசி ஹோட்டல்ஸ் பங்கைப் பெற்றனர்.
பிப்ரவரி 1
2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரி விகிதங்கள் மறுசீரமைப்பு, புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் உற்பத்திக்கு ஊக்கத்தொகை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ஆதரவு ஆகியவை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 29
கூகுள், மெட்டாவுடன் கூட்டணி அமைத்து, ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துணை நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தொடங்குவதாக அறிவித்தது.
செப்டம்பர் 1
2025-26-ஆம் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
அக்டோபர் 1
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனப் பிரிவும், பயணிகள் வாகனப் பிரிவும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிந்தன.
நவம்பர் 18
ஹிந்துஸ்தான் யூனிலிவரின் ஐஸ்க்ரீம் தொழில் தனி நிறுவனமாக பிரிந்தது. அந்த நிறுவனத்தை பங்குச் சந்தையில் 2026-ஆம் ஆண்டு பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 17
காப்பீடுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
டிசம்பர் 29
இந்திய நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டில் தொடக்க பொதுப் பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.95 லட்சம் கோடி திரட்டியுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.