பிரபலங்களின் காதல் திருமணம்  
காதலர் தினம்

பிரபலங்களின் காதல் திருமணம்!

கடந்தாண்டில் நடைபெற்ற பிரபலங்களின் காதல் திருமணம் பற்றி...

எஸ். ரவிவர்மா

நடிகர் அஜித் குமார் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா வரிசையில் லேட்டஸ்ட்டாக பல திரையுலகப் பிரபலங்கள் திருமண வாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.

திருமணம் என்றாலே கொண்டாட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கும். அதிலும் காதல் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்? ஒவ்வொரு திருமணமும் பல சுவாரஸ்ய கதைகளைக் கொண்டதாக இருக்கும்.

திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கலைஞர்கள், ஒரு கட்டத்தில் தங்களுக்கு பிடித்தவர்களுடன் காதல்வயப்படுவது இயல்பான ஒன்று. சில காதல்கள் தோல்வியில் முடியும், சில காதல்கள் திருமண வாழ்க்கைக்கு முன்னேறும்.

அவ்வாறு கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நட்சத்திரங்களின் திருமணங்கள்.

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இவர், தொழிலதிபரும் தனது பள்ளி நண்பருமான ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் செய்துகொண்டார். ஹிந்து மற்றும் கிறிஸ்துவ முறைகள்படி நடைபெற்ற இவரது திருமணத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் தம்பதி.

நாக சைதன்யா - சோபிதா

தெலுங்கு உலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து 2017ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களின் திருமண உறவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், 2021-ல் விவாகரத்து பெற்றனர்.

அதன்பிறகு, பொன்னியின் செல்வன் படம் மூலம் பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்த நாக சைதன்யா, கடந்தாண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்.

நாகார்ஜுனாவுடன் நாக சைதன்யா - சோபிதா தம்பதி.

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

பேட்ட, என்னை நோக்கிப் பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானாவர் மேகா ஆகாஷ்.

இவர் நீண்ட நாள்களாக காதலித்து வந்த சாய் விஷ்ணு என்பவரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் திருமணம் செய்துகொண்டார்.

மேகா ஆகாத் திருமணம் செய்துகொண்ட சாய் விஷ்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகன் ஆவார். இவர் காலா, கபாலி ஆகிய படங்களில் பா. ரஞ்சித்துக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

வரலட்சுமி - நிக்கோலை சச்தேவ்

போடா போடி படத்தின் மூலம் திரையில் அறிமுகமான வரலட்சுமி, பாலாவின் தாரைத் தப்பட்டை படத்தின் மூலம் பிரபலமானார். இவர், பிரபல நடிகர் சரத் குமாரின் மகள் ஆவார்.

தொழிலதிபர் நிக்கோலை சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதலித்து வந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் தாய்லாந்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

வரலட்சுமி - நிக்கோலை சச்தேவ்

பிரேம்ஜி - இந்து

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும் நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜிக்கும் இந்து என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணமானது.

வங்கிப் பணியாளரான இந்துவும் பிரேம்ஜியும் நீண்ட நாள்கள் காதலுக்கு பிறகு இருவீட்டாரின் சம்மதத்துடன் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

பிரேம்ஜி - இந்து

பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக்

தமிழில் கோட், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர்.

இவர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி (திங்கள்கிழமை) திருமணம் செய்துகொண்டார்.

பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக்

ரம்யா பாண்டியன் - லவல் தவான்

தமிழில் ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

இவர், பெங்களூருவில் கடந்தாண்டு யோகா கற்றுக்கொள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்த நிலையில், பயிற்சியாளர் லவல் தவானை காதலித்துள்ளார். தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ரம்யா பாண்டியன் - லவல் தவான்

சாக்‌ஷி அகர்வால் - நவனீத் மிஸ்ரா

ராஜா ராணி, காலா உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் சாக்‌ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மூலம் பிரபலமானார்.

இவர் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ரா என்பவரை காதலித்து, கடந்த மாதம் கோவாவில் திருமணம் செய்துகொண்டார்.

சாக்‌ஷி அகர்வால் - நவனீத் மிஸ்ரா

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி

இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சித்தார்த், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமான அதிதி ராவ் ஹைதரியை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கும்போது காதல் உருவானது.

இவர்களின் திருமணம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயிலில் நடைபெற்றது.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் ராயன் படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

இவர், மாடல் அழகி தாரிணி காலிங்கராயர் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துகொண்டார்.

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி

டாப்ஸி - மத்யாஸ் போயே

ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் டென்மார்க்கைச் சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மாத்யாஸ் என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்த நிலையில், 2024 மார்ச் மாதம் ராஜஸ்தானில் திருமணம் செய்துகொண்டார்.

டாப்ஸி - மத்யாஸ் போயே

ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி

பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தேவ், தீரன், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்.

ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

இந்தியாவுக்கு வருவதில் கௌரவம்: மெஸ்ஸி

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்

SCROLL FOR NEXT