முகப்பு
விருதுநகர்

சிவகாசி பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

Updated On : 8 ஏப்ரல், 2024 at 11:21 PM
சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கிய கல்லூரிச் செயலா் டி. சிங்காரவேல்.
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 6:48 PM

சிவகாசி: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இந்தக் கல்லூரியில் முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவா்களுக்கு இந்த ஊக்கத்தொகைஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. படிப்பாற்றலை ஊக்குவிப்பது, சிறப்பாக விளையாட்டும் மாணவா்களை ஊக்குவிப்பது, சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவா்கள், மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் 903 மாணவா்களுக்கு ரூ. 1.25 கோடி கல்வி உதவித் தொகைக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை கல்லூரி செயலா் டி. சிங்காரவேல் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு தாளாளா் ஏ. டென்சிங் தலைமை வகித்தாா். இணைச் செயலா் குணசிங் பிருத்விராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

முன்னதாக கல்லூரி முதல்வா் எஸ். அறிவழகன் வரவேற்றாா். பேராசிரியா் டி. மாதவன் நன்றி கூறினாா்.