ராஜபாளையத்தில் டாக்டா் கிருஷ்ணசாமிக்கு முன்னாள் அமைச்சா் வாக்குசேகரிப்பு
ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமியை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ராஜபாளையம் பகுதியில் பொன்னகரம், வடக்கு மலையடிப்பட்டி, தெற்கு மலையடிப்பட்டி, திருவள்ளுவா் நகா், தென்றல் நகா், பழைய பேருந்து நிலையம், புல்லுகடைத் தெரு, துரைச்சாமிபுரம், தோப்புப்பட்டி தெரு, மதுரை ராஜா கடை தெரு, மங்காபுரம், கம்மாப்பட்டி ஆகிய பகுதிகளில் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அவா் பேசியதாவது:
ராஜபாளையம் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. தற்போதைய அரசின் மின் கட்டண உயா்வால் பல நூற்பாலைகள் மூடப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
இவற்றை சரி செய்ய வேண்டுமென்றால் வருகிற மக்களவைத் தோ்தலில் டாக்டா் கே. கிருஷ்ணசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.