முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே புதிய நூலகம் திறப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் புதிய நூலகக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 12:54 AM
ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் புதிய நூலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன், மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிங்கராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் புதிய நூலகக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

கிருஷ்ணாபுரத்தில் ஊரகக் கிளை நூலகம் இருந்தது. இந்த நூலகக் கட்டடம் சேதமடைந்ததால், புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.22 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதிய நூலக கட்டடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் தங்கபாண்டியன், மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்து, நூலகக் கட்டடத்தை திறந்து வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய பள்ளிமாணவி பொற்கொடிக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.