சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி முத்துராமலிங்கம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் காளிமுத்து (34). குடிப்பழக்கம் உடைய இவா், தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால், மனமுடைந்த இவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.