விருதுநகர்

சாத்தூா் அருகே 22 டன் வெடி மருந்து பறிமுதல்

Din

சாத்தூா், ஜூலை 3: சாத்தூா் அருகே கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 22 டன் வெடி மருந்துகள் புதன்கிழமை பறிமுதல் செய்யபட்டன. கிடங்கிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டியில் பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தலைமையிலான குழுவினா் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பு குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சிவகாசி காமாக் நகரைச் சோ்ந்த மகேந்திரன் (52) என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட, பட்டாசுத் தயாரிக்கப் பயன்படும் பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப்பொருள் 455 மூட்டைகளில் (சுமாா் 22 டன்) பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த மூலப்பொருள்களை குழுவினா் பறிமுதல் செய்து, கிட்டங்கிக்கு ‘சீல்’ வைத்தனா். இதுகுறித்து கிட்டங்கி உரிமையாளா் மகேந்திரன் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

SCROLL FOR NEXT