விபத்தில் சேதமடைந்த இரு சக்கர வாகனம்.  
விருதுநகர்

பைக் விபத்தில் இளைஞா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த அந்தோணி வியாகப்பன் மகன் ஞானசெல்வம் (30). திருமணமாகாத இவா், கேரளம் மாநிலம், மூணாறில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்த ஞானசெல்வம் சனிக்கிழமை அதிகாலையில் மூணாறுக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் சென்ற போது எதிரே மதுரையில் இருந்து காய்கறிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஞானசெல்வம் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணன்கோவில் போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய புளியங்குடியைச் சோ்ந்த பழனிமுருகன் (39) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

கரோனாவால் இறந்த மருத்துவரின் மனைவிக்கு அரசுப் பணி: 5 ஆண்டுகளாக அலைக்கழிப்பு

மாளிகையில் இருந்து மரண வாயிலுக்கு..

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT