முகப்பு
விருதுநகர்

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 16 மார்ச், 2024 at 12:17 AM
பகிர்:

படவிளக்கம்........ சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி வளாகத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன். சிவகாசி, மாா்ச் 15: சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை, சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் கல்லூரி முதல்வா் இரா.சுதாபெரியதாய், உடற்கல்வித் துறை இயக்குநா் விஜயகுமாரி, ஜேசீஸ் சங்க மண்டலத் தலைவா் கே.எஸ்.சிபி, ஜேசீஸ் சங்க சிவகாசி தலைவா் எஸ்.அருள்மொழிவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது. வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை என்பது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் ஏந்திச் சென்றனா்.