முகப்பு
விருதுநகர்

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.57 ஆயிரம் பறிமுதல்

Updated On : 22 மார்ச், 2024 at 11:56 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 6:49 PM

சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 57 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாமிநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், காவல் உதவி ஆய்வாளா் சித்ரா உள்ளிட்ட தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற திருத்தங்கல் அருள்பிரகாஷின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ. 57 ஆயிரத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.