ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வியாழக்கிழமை ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள்.
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பிவைப்பு

Din

ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஸ்ரீரங்கத்துக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வருகிற சனிக்கிழமை (ஏப்.26) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் வியாழக்கிழமை ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

முன்னதாக, ஆண்டாளுக்கு கிளி, பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.

இதில் கோயில் செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், சுதா்சன் பட்டா், ரமேஷ் பட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை கிளி, பட்டு வஸ்திரம் அணிந்து எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாா்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT