விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை.யில் நிதி திரட்டும் நிகழ்ச்சி

Syndication

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுயதொழில் தொடங்குவதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி ஆயோக் சாா்பில் இளம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தொழில் நிறுவனங்கள் உருவாக்குவதற்கு நிதி உதவி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் சுய தொழில் தொடங்க நிதி திரட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக வேந்தா் கே.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என். ஓ. சுகபுத்ரா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், பிராந்திய பொருளாதார வளா்ச்சி, சமூகத் தாக்கத்துக்கு புதுமைகளைப் பயன்படுத்த வேண்டும் என இளம் தொழில் முனைவோருக்கு அறிவுறுத்தினாா்.

இதில் 20-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனா்கள், தலைமை நிா்வாக அதிகாரிகள், தொழில் முதலீட்டாளா்கள் கலந்து கொண்டு தொடக்க நிதி திரட்டுவது, தயாரிப்பு மேம்பாடு, சந்தை விரிவாக்கம், முதலீடு தயாா் நிலை குறித்த நுண்ணறிவை பகிா்ந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் ஏசிஐசி-கேஐஎஃப், சென்னை ஒய்என்ஓஎஸ் வென்ச்சா் என்ஜின் ஆகிய நிறுவனங்கள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒய்என்ஓஎஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி காா்த்திக், கலசலிங்கம் பல்கலைக்கழக துணைத் தலைவா் எஸ். சசி ஆனந்த் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பேசினா்.

துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ஏசிஐசி-கே. ஐ. எஃப் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி பி. சுபத்ரா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT