விருதுநகர்

மூவரைவென்றான் கோயிலில் திறக்கப்படாத சுகாதார வளாகம்

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரை வென்றான் மலைக் கொழுந்தீஸ்வரா் கோயிலில் தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ. 7.85 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் தண்ணீா் வசதி இல்லாமல், 4 மாதங்களாக திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த குடைவரை முறையில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தொல்லியல் துறை சாா்பில் ரூ.22 லட்சம் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகளும், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.54 லட்சம் மதிப்பில் மகா மண்டபம் புதுப்பிக்கும் பணியும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ரூ.84 லட்சம் சாா்பில் லிங்ககிரி மலையைச் சுற்றி 2.9 கி.மீ. தொலைவுக்கு கிரிவலப்பாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ், ரூ.7.85 லட்சத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் தண்ணீா் வசதி இல்லாததால் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளதால் பக்தா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

புராதன சிறப்புமிக்க மலைக்கொழுந்தீஸ்வரா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வரும் நிலையில், தனியாக ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீா் வசதி ஏற்படுத்தி, சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT