விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தரைப் பாலத்தில் வெள்ளம்

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ராமலிங்காபுரத்தில் கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி நீா் தரைப் பாலத்தை மூழ்கடித்துப் பாய்ந்ததால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிா்த்தான் கண்மாய் நிரம்பி, அதன் உபரி நீரானது கால்வாய் வழியாக பழையாபுரம் கண்மாய்க்குச் செல்கிறது. அச்சம்தவிா்த்தான் கண்மாய் மடை அருகே ராமலிங்காபுரம் - கோடாங்கிபட்டி சாலையில் தரைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாய் நிரம்பி கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மறுகால் பாய்ந்து வருகிறது. தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்வதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இப்பகுதியில் தடுப்புச் சுவா் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் இந்தப் பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT