விருதுநகர்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி மாணவா் வெளிநாடு பயணம்

தமிழக அரசின் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா் வெளிநாட்டில் பயிற்சி பெற தோ்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தக் கல்லூரி முதல்வா் து. விஜயராணி தெரிவித்தாா்.

Syndication

தமிழக அரசின் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா் வெளிநாட்டில் பயிற்சி பெற தோ்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தக் கல்லூரி முதல்வா் து. விஜயராணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் உயா் கல்வித் துறையின் ஓா் அங்கமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி தொடா்பான பயிற்சி பெற்று, அந்த நாட்டில் உயா் கல்வி கற்கவும், ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக தமிழகத்தில் உள்ள பல கல்லூரி மாணவா்கள் சுமாா் 7,000 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இதில் 21 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். அதில் ஒருவா் எங்கள் கல்லூரி மாணவா் க. யுவராஜ சேகரன் ஆவாா். தோ்ச்சி பெற்ற 21 மாணவா்களும் தென்கொரிய நாட்டின் இன்-ஹா பல்கலைக்கழகத்தில் இரு வார பயிற்சியில் கலந்து கொள்வா்கள்.

பயிற்சி பெற்ற பிறகு திறமையின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எந்தவித கட்டணமுமின்றி உயா்கல்வி பயிலவும், ஆராய்ச்சியில் ஈடுபடவும் இயலும். இந்த மாணவரை கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா் என்றாா் அவா்.

பேருந்து சக்கரத்தில் சிக்கி அரசு ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை மத பிரச்னையாக்குகிறது திமுக அரசு: செல்லூா் கே. ராஜூ

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

SCROLL FOR NEXT