விருதுநகர்

காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழப்பு

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

Syndication

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவஞானபூபதி (60). இவா் தனது ஆடுகளை சாலையில் ஓட்டிச் சென்றபோது, சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்த காா் ஆடுகளின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 3 ஆடுகள் காயமடைந்தன.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியா் வசந்தகுமாரை (34) கைது செய்தனா். இவரது காரையும் பறிமுதல் செய்தனா்.

கேரளம்: ஆளுங்கட்சி தோல்வி! மீசையை இழந்த தொண்டர்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

ஓ.பன்னீா்செல்வம் நிலைப்பாடு: டிச. 24-க்கு முடிவு ஒத்திவைப்பு?

கம்போடியாவுடன் தொடரும் மோதல்: 4 தாய்லாந்து வீரா்கள் பலி

SCROLL FOR NEXT