ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சங்கரப்பநாயக்கன்பட்டியில் கழிவு நீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்த கழிவு நீா். 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கழிவு நீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்த கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கழிவு நீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்த கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், பூவானி ஊராட்சிக்குள்பட்ட சங்கரப்பநாயக்கன்பட்டியில் 150- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாததால் கழிவுநீா் செல்ல வழியின்றி சாலைகளிலும், வீடுகளுக்கு அருகிலும் தேங்கியுள்ளது. வீட்டு வாசலில் குடிநீா் குழாயை சுற்றிலும் கழிவுநீா் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இதனால் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா். எனவே கழிவு நீா் கால்வாயை தூா்வார ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT