விருதுநகர்

சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

சாத்தூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வி, மாவட்டத் துணைத் தலைவா் முருகானந்தம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியா்களுக்கு அகவிலைப் படியுடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சத்துணவு ஊழியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள், ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT