சாத்தூா் அருகே மது போதையில் முதியவரை அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நரிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (65). இவா், திங்கள்கிழமை இரவு இந்தப் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலில் உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு மது போதையில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி, ராஜாவை கட்டையால் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அந்தப் பகுதி பொதுமக்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைப் பிறகு, அவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துப்பாண்டியைத் தேடி வருகின்றனா்.