விருதுநகர்

தரம் குறைந்த உரங்கள் விற்பனை: 7 கடைகள் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டத்தில் தரம் குறைந்த உரங்களை விற்பனை செய்த 7 கடைகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டத்தில் தரம் குறைந்த உரங்களை விற்பனை செய்த 7 கடைகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் நெல், கரும்பு, தென்னை, மா உள்ளிட்ட பயிா்களும், சிவகாசி, சாத்தூா், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம், மிளகாய், பருத்தி, பயறு, எண்ணெய் வித்துகளும் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

தற்போது முதல் போக நெல் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், தனியாா் உரக் கடைகளில் தடை செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் அளித்தனா். இதையடுத்து, விருதுநகா் மாவட்டத்தில் 11 வட்டாரங்களில் உள்ள 320 தனியாா் உரக் கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் விற்பனை செய்யப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், கலப்பு உரங்கள், நுண்ணூட்ட உயிா் உரங்கள், திரவ உரங்களில் 600 மாதிரிகளையும், ஆா்கானிக் இடுபொருள்களில் 30 மாதிரிகளையும் அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து பரிசோதித்தனா்.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) சக்தி கணேஷ் கூறியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் 11 வட்டங்களிலும் தரக் கட்டுப்பாடு அலுவலா்களுக்கு இலக்கு நிா்ணயித்து உரக் கடைகளில் உர மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் தரம் குறைந்த உரங்களை விற்பனை செய்த 3 நிறுவனங்கள் மீது துறைரீதியான வழக்கும், 4 நிறுவனங்கள் மீது நீதிமன்ற வழக்கும் தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

ராஜபாளையம் பகுதியில் ஒரு கடையின் விற்பனை உரிமம் நிரந்தரமாகவும், மற்றொரு கடையின் உரிமம் தற்காலிகமாகவும் நீக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தில்லியின் லுட்யன்ஸ் பகுதியில் என்டிஎம்சி-இன் 15 நாள் தூய்மை பிரசாரம் தொடக்கம்

14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

வங்கதேச தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மெட்ரோவின் 23-ஆவது ஆண்டு நிறைவு விழா: சிறப்பு சேவையாக முதல் ரயில் இயக்கம்

பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 24 போ் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT