விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, மூத்தத் தலைவா் நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நகரச் செயலா் அய்யணன் தலைமை வகித்தாா். பின்னா், கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் கணேசமூா்த்தி, வழக்குரைஞா் பகத்சிங், வி.தொ.ச. வரதராஜன், மாவட்டக் குழு தோழா் ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.