விருதுநகர்

வன விலங்குகள் வேட்டை: 7 நாட்டு வெடிகுண்டுகள் மீட்பு

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் மீட்டனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகம், குன்னூா் வனப் பகுதி, கணவாய் சரகத்தில் வனக் காப்பாளா் அன்னத்தாய் தலைமையில், வனத் துறையினா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கிருஷ்ணன்கோவில்-வத்திராயிருப்பு சாலை அருகே மலையடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் நாட்டு வெடிகுண்டில் பழங்களை தடவி வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

பின்னா், அங்கிருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் மீட்டு, காவல் துறையில் ஒப்படைத்தனா். இந்த நாட்டு வெடிகுண்டுகளை வைத்தவா்கள் குறித்து வனத் துறை, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விலை உயரும் ரெனால்ட் காா்கள்

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT