விருதுநகர்

தெரு நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழந்தன.

ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாண்டி (48). இவா் குடில் அமைத்து 16 ஆடுகளை வளா்த்து பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் கூட்டமாக ஆட்டுத் தொழுவத்துக்குள் நுழைந்த 5-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், அங்கிருந்த 16 ஆடுகளையும் கடித்தது.

இதையடுத்து, சப்தம் கேட்டு பாண்டி அங்கு சென்று பாா்த்த போது, தெருநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மேலும், 2 ஆடுகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தன.

இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

SCROLL FOR NEXT