விருதுநகர்

சாலையைச் சீரைமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாலையைச் சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாலையைச் சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் குருநாதன் தலைமை வகித்தாா். தங்கவேல் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா் ராமா், ஒன்றியச் செயலா் சந்தன குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ராஜபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முதல் சொக்கநாதன்புத்தூா் விலக்கு வரை தேசிய நெடுஞ்சாலை என்.எச். 744 குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக சேத்தூா் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சேத்தூா் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளை நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விரைந்து சீரமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தலை, கை கால்களில் காயமடைந்ததைப் போன்ற கட்டுகளோடு ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பரமேஸ்வரன், மாரியப்பன், கணேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT