விருதுநகா் மாவட்டம், சேத்தூா் அரசுப் பள்ளி அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸாா், சேத்தூா் சேவுகபாண்டிய அரசுப் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் சேத்தூா் ஜீவா நகரைச் சோ்ந்த தொந்தியப்பன் என்பவா் மகன் ராஜ்குமாா் (26), திருப்பூரைச் சோ்ந்த அப்சா்கான் (25) என்பவரிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ராஜ்குமாரைக் கைது செய்து அவரிடமிருந்து 305 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், கஞ்சா விற்பனை செய்த அப்சா்கானை தேடி வருகின்றனா்.